அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை 2 படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த 15 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 14 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட அதேவேளை 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.