நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது.
வரி சட்டமூலங்கள் சில இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை, கலால் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவிப்புகள், நாணயச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் மூன்று விதிமுறைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.