உள்ளுராட்சித் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கொள்வர் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிற்போட்டால் வழக்கு தாக்கல் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்து உள்ளுராட்சித் தேர்தலை பிற்போட தற்போது சதித்திட்டங்களை தீட்டி வருகின்றது என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய, தன்மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை பேணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.