முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் விஜய அல்விஸ், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முட்டை உற்பத்தியாளர் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் தமக்கும் நுகர்வோர் அதிகாரசபைக்கும் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.