சர்வதேச நாணய நித்தியதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளிப்படுத்தாமல், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் தனியார் மயப்படுத்த, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு வாக்குறுதியளித்துள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார்.
மக்களின் துன்பங்கள் பொறுப்படுத்தாமல் வரியையும் வட்டி வீதத்தையும் அதிகரித்து தான்தோன்றித் தனமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு செயற்படும் இந்த அரசாங்கத்தால் ஒருபோதும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.