நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு வழங்கப்படாத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.
வரிச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அவர், அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் அவர்களுக்கு சாதகமாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் நிதிக்குழுவிடம் கொடுக்க முடியாத அறிக்கை மற்றவர்களுக்கு எப்படி சென்றது என்றும் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர் கருது தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த ஆவணத்தை படித்து மக்களை பயமுறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு செயற்படுமாறும் ஹர்ஷ டி சில்வாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.