குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் மோதும் அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலையும் பாதிக்கலாம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பலத்தில் உள்ளது.
குடியரசுக் கட்சி சுமார் இருநூறு இடங்களில் வெற்றி பெறலாம் என அறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயம் ஜனநாயக கட்சிக்கு 175 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றால், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட முடியும் என நம்பப்படுகிறது.