நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்கும் மத்திய புலனாய்வு அமைப்புடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடியுள்ளார்.
டெல்லியில் இரகசிய இடத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு மட்டுமின்றி பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், நிதியளித்தல், போதைப்பொருள் பயங்கரவாதம் போன்றவற்றை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மத்திய – மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால் அதுகுறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



















