2022 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரை இறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றிக்கொண்ட பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
சிட்னியில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.
முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதில் டெரில் மிச்செய்ல் 53 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து, 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை அடைந்தது.
இந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.இதில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 13 ஆம் திகதி மெல்பர்னில் இடம்பெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.