உள்நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை என்பதனால் அதனை இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது பெலவத்தை, செவனகல, ஹிகுரான மற்றும் கல்ஓயா தொழிற்சாலைகளில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் எண்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு சீனி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.