ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் “பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமென 539 பில்லியன் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளதன் மூலம் இது ஒரு யுத்தகால வரவு செலவுத்திட்டம் போலவே உள்ளது எனவே இதில் தமிழ் மக்களுக்கான எந்த அறிவிப்புக்களும் இதில் கிடையாது
மேலும் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் செயலணி அமைக்கப்பட்டது போல் கிழக்கிலும் விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.