இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது, போலி அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவருக்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நியாயமற்றது எனவும் அதை நீக்குமாறும், வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது டயனா கமகே சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.