மரம் நடுவோம் தேசத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் அனுசரணையுடன் கார்த்திகை மாதமான மரநடுகை மாதமாக கொண்டு நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக விவசாய மற்றும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தரன். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தமை குறிப்பிடதக்கது.