பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரைக் கண்காட்சி கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இன்று (வியாழக்கிழமை) கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர் தலைமையில் குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
இதில் கருத்து தெரிவித்த தபால் அதிபர் “முன்னைய காலங்களில் மாணவர்கள் முதல் பெரியவர் வரை முத்திரைகளை சேகரித்து அவற்றை காட்சிப்படுத்துதலும் முத்திரைகளை நினைவுச்சின்னமாக பேணி பாதுகாத்தலும் அதனூடாக வருமானத்தை மேம்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் காணப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது முத்திரை சேகரிக்கும் பழக்கம் மிகவும் அரிதாகவே உள்ளது அத்துடன் போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு மாணவர்கள் எதிர்காலத்தை வீணடிக்கின்றனர்” எனவும் தெரிவித்தார்.
இவற்றைக் கருத்தில் கொண்டு மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கை உருவாக்கும் நோக்குடன் குறித்த முத்திரைக் கண்காட்சி இடம்பெற்றது.