கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கையொப்பமிட்டு அரச அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் புதிய செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தடை நீக்கம் தொடர்பான அறிக்கையை அமைச்சு வெளியிட்டுள்ள போதிலும், ஓகஸ்ட் மாதம் கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டது.
கிளைபோசேட் இறக்குமதிக்கான பதிவாளரின் சிபாரிசுக்கு உட்பட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகம் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.