எதிர்வரும் ஜனவரி மாதம் தான் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து அதில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சில சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்றும் எனவே தான் எழுதும் புத்தகத்தின் மூலம் அவை வெளிவரும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியிள்ளார்.
ஊழல் செயற்பாடுகளை எதிர்த்த போது, தாம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பாகவும் அதில் விளக்கமளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சில வேலைத்திட்டங்களை எதிர்த்ததன் மூலம் தான் ராஜபக்ச குடும்பத்தின் எதிரியாக மாறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.