தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் ‘தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை ஆணைக்குழு முடிவு செய்யும், மேலும் ஒரு வேட்பாளர் அதற்கு மேல் செலவு செய்து வெற்றி பெற்றால், அவரது உறுப்புரிமையை பறிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வழங்கப்பட்டுள்ளது.