2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த திங்கட்கிழமை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
வாக்கெடுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த அதேவேளை சி.வி. விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.