ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரணை செய்யவுள்ளது.
15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென கோரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.
மேலும் காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் காளைகள் உள்ளன என்றும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னர், பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் 2017ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனுமதியும் அவசர சட்டமும் இயற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.