அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அவர், டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக உறுதியளித்தார்.
1984 ஆம் ஆண்டு முதல் இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வருடத்திற்குள் அந்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய அதேவேளை சிங்கள மக்களின் கோரிக்கைகளையும் செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.