லங்கா சதொச சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளை சீனியின் விலை 9 ரூபாயினாலும் கோதுமை மாவின் விலை 14 ரூபாயினாலும் வெள்ளை பூண்டின் விலை 30 ரூபாயினாலும் பெரிய வெங்காயத்தின் விலை 43 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 229 ரூபாய் எனவும் ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை 265 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 255 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளை பூண்டு 495 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.