பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஷரீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பத்திரிக்கையாளர் ஷரீப் மற்றும் குர்ரம் அகமது ஆகியோர் அம்மொடும்ப்க்வேனியாவில் தமது நேரத்தினைக் கழித்துள்ளனர்.
குறித்த பகுதியானது, துப்பாக்கிச் சூடு நடத்தக்சூடிய அதிகார வரம்பைக் கொண்ட பொழுதுபோக்கு வளாகமாகும்,
நைரோபிக்கு தெற்கே 85 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்தப்பகுதியில் இருவரும் விருந்து உபசாரங்களை நிறைவு செய்து கொண்டு இரவு 8 மணியளவில் குவேனியாவிலிருந்து நைரோபிக்கு புறப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் பிரதான சாலைக்கு வந்ததும், அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனும் பொலிஸாரின் உத்தரவை இருவரும் மீறியதாக கூறப்படுகின்றது.
இதேநேரம், இருவரையும் பொலிஸார் வழிமறித்து திருடப்பட்ட வாகனம் தொடர்பில் வினவியபோது, அகமட் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். இதனால் பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளது.
இவ்வாறான நிலையில், கென்ய புலனாய்வு பத்திரிகையாளர் பிரையன் ஒபுயா, ஷெரீப்பைக் கொன்றமை பயங்கரமான நிகழ்வாகும்.
குறித்த நிகழ்வின்போது துப்பாக்கிச் சூடு காரின் பின்புற கண்ணாடி வழியாக துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நைரோபியின் முன்னாள் ஆளுநர் மைக் சோன்கோ, கென்ய காவல்துறையினரைப் பாதுகாக்கும் வகையில், ஷெரீப்பின் மரணத்திற்கு அவர்களைக் குறை கூறக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பணமோசடி கும்பல் தொடர்பாக அவர் மேற்கொண்ட புலனாய்வு விசாரணையின் காரணமாக, ஷெரீப் ‘பாகிஸ்தான் கொலையாளி குழுவால்’ சுடப்பட்டுள்ளதாகவும் பிறிதொருகோணத்தில் கூறப்படுகின்றது.