இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கானின் சட்டத்தரணி அன்வர் மன்சூர் வாதிடுகையில், இந்த அழைப்பாணையைத் பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் விடுக்கவில்லை.
தேர்தல் ஆணையகத்தின் செயலாளரால் தான் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதன் சட்டபூர்வமான தன்மையை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாத வரையில், அழைப்பாணை அனுப்புவது சட்டவிரோதமானது என்றார்.
இதற்கு பதிலளித்த தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் துரானி, ஆணையகத்தின் சார்பில் செயலாளரால் அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும், அது தேர்தல்கள் ஆணையகத்தின் அழைப்பு தான் என்றும் கூறினார்.
பின்னர், வழக்கின் விசாரணை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக 19ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
அவர்களில் இருவரிடமிருந்து எழுத்துபூர்வ பதில்கள் ‘திருப்தியற்றவை’ என நிராகரிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 27ஆம் திகதி மூவரையும் தேர்தகள் ஆணையகத்தின் முன் ஆஜராகுமாறும் கோரப்பட்டனர்.
இம்ரான் உள்ளிட்ட் தலைவர்களுக்கு அவர்களின் செய்தியாளர் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் நிகழ்த்திய பேச்சுகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.