சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் பங்கேற்றனர்.
அந்நாட்டின் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு மாணவர்கள் கேன்டீனின் நுழைவாயிலில் பதாகைகளைப் ஏந்தியப்படி போராடங்களில் ஈடுபடத் தொடங்கினர், பின்னர் அதிகமான மக்கள் திரள ஆரம்பித்தனர்.
போராட்டத்தின் போது மாணவர்கள் ‘தேசிய கீதம்’ மற்றும் ‘சர்வதேசம்’ பாடினார்கள். பின்னர், சில மாணவர்கள் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர், ஆனால், எதிர் கோஷங்கள் சத்தமாக இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் உண்மையில் என்ன கோஷம் எழுப்பது என்பது தெரியாமலே பங்கேற்றிருந்தனர். மேலும், ‘கொரோனா கட்டுப்பாடு வேண்டாம்’, ‘சுதந்திரம் வேண்டும்’, ‘சுதந்திரம் வெல்லும்’ என்று மாணவர் கோஷங்களை எழுப்பினர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உள்ள ஷாங்காயில் நடந்த போராட்டத்தில், சிலர் மெழுகுவர்த்தி ஏற்றியதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பூங்கொத்துகள் வைத்ததையும் காண முடிந்தது.
கடந்த வியாழக்கிழமை, ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்த எதிர்ப்பு இந்தப் போராட்டத்தின் போது, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிலர் வெளிப்படையாகவே கோபத்தை வெளிப்படுத்தினர்.