அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் வழிப்பாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்லது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மோசடியான முறையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இத்தகைய மோசடி மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டத்தை இயற்ற சட்ட ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக்கோரி மனித தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டம் வழங்கும் வழிபாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்ல என தெரிவித்துள்ளது.
மேலும் மோசடி, வஞ்சகம், வற்புறுத்தல், ஆசை வார்த்தை கூறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதமாற்றம் செய்வது வழிப்பாட்டு உரிமை ஆகாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒடிசா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஏற்கனவே மதமாற்ற தடைச்சட்டம் அமுலில் இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.அர்ஷா இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்று தெரிவித்ததோடு மாநில அரசுகளின் கருத்துகளையும் இணைத்து விரிவாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார்.