ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான நேர்காணல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பல நேர்காணல் குழுக்களின் ஊடாக இது தொடர்பான தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்காக, கட்சியின் சில முன்னாள் ஆசன அமைப்பாளர்கள் வெளியேறியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நேர்காணல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆசன அமைப்பாளர்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓராண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேர்காணல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், கட்சியில் இருந்து விலகியவர்கள் தொடர்பில் தாம் வருத்தமடைவதாக தெரிவித்தார்.