2023ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை நாடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
குறித்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ஆம் திகதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடுமுழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். 40 கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஜி20 மாநாட்டுக்கான திட்டங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்.