பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ராவல்பிண்டி மைதானத்தில் முதலாம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக, 657 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 579 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 78 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதற்கமைய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு 343 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 268 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இங்கிலாந்து அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இங்கிலாந்து அணி சார்பில், முதல் இன்னிங்ஸில் 153 இரண்டாவது இன்னிங்ஸில் 87 ஓட்டங்களை அடித்த ஹரி புரூக் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 9ஆம் திகதி முல்தானில் ஆரம்பமாவுள்ளது.