அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார்.
ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார்.
ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடின் பெருமிதம் கொண்டார்.
ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாடு அணு ஆயுதங்களை தற்காப்புப் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கும் என்று புடின் முன்பு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.