கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ள முக்கிய நடிகரின் விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகிய ஜிகர்தண்டா பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 8 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஜிகர்தண்டா-2 படத்தில நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், இப்படத்தின் பூஜை மதுரையில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா படத்தில், சித்தார்த் கதாநாயகனாகவும் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014ஆம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


















