சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் 3 பில்லியன் டொலர் கடனுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் 5 பில்லியன் டொலர் கடனை இலங்கை பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்வவியில், பொதுச் சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் சுமார் 3 பில்லியன் டாலர்களை திரட்ட முடியும் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடான் கடனுக்கு மேலதிகமாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஏனைய சகல உபாயங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மற்றும் உதவித் தொகைகள் தொடர்பில் அரசாங்கம் தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார் என்றும் அதன் மூலம் இன்னும் 2-3 பில்லியன்டொலர்களை திரட்ட முடிந்தால், நமது கருவூலம் மற்றும் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.