மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் போதைப்பொருள் தடுப்புப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் என்பன மேல் மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
நிகழ்ச்சியின் இறுதியில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.