டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை இராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்ஸ் குழுக்களை இயக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா என எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டாம் என்றும் வாக்களித்ததை தொடர்ந்து அவர் இதனை அறிவித்துள்ளார்.