யாழ். மாவட்ட சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கண்காட்சியும் விற்பனையும் இன்று (வியாழக்கிழமை) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பார்வையிட்டதுடன் பொருட்களையும் கொள்வனவு செய்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் நோக்கில் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை விரிவுபடுத்தும் நோக்கிலும் குறித்த விற்பனையும் கண்காட்சியும் இடம்பெற்றது.
வட மாகாண கூட்டுறவு திணைக்களம் மற்றும் வட மாகாண ஆளுநர் செயலகம் இணைந்து குறித்த கண்காட்சியையும் விற்பனையையும் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.