உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தலுகான தேவைகளை மதிப்பிடுவதற்காக வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுவதற்காக மாவட்ட வாரியாக உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு மற்றும் வேட்புமனுக்களை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் இறுதியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்ற நிலையில் அடுத்த வருடம் பங்குனி மாதம் 20 ஆம் திகதி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்க்ள என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.