வரவிருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, எச்சரித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) தனது வழக்கமான இரவு காணொளியில் உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும், தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்’ வலியுறுத்தினார்.
நிலைமையை மறுபரிசீலனை செய்வதற்காக தனது உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்ததாகவும், தனது அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கத்தின்ன் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார்.
‘விடுமுறை காலம் விரைவில் நெருங்கி வருவதால், ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். கிறிஸ்தவ மதிப்புகள் அல்லது அந்த விஷயத்தில் எந்த மதிப்பும் அவர்களுக்கு இல்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில், உக்ரைனிய இராணுவத் தலைமையானது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி விநியோகத்தில் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது, இது ஏற்கனவே சமீபத்திய வாரங்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது.