தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பரிசாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானித்தால் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டாலும் சுமார் 81 கோடி மக்கள் பலனடைவார்கள் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காலகட்டத்தின்போது ஏழை மக்கள் நிதி நெருக்கடியை எதிா்கொண்டதால், பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.