திருகோணமலை விளக்க மறியல் சிறைச்சாலையில் குடிநீர் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) மறை மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நிதி அனுசரணையில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய நோயல் இம்மானுவேல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிறைச்சாலையில் இருப்பவர்களை பார்வையிட வருபவர்களுக்கான குறித்த குடிநீர் தொகுதியானது நீண்ட கால தேவையாக காணப்பட்டது இதனை தீர்த்து வைக்கும் முகமாக இந்த குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்கு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதோடு சுத்தமான குடி நீருக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில் குறித்த செயல் திட்டத்தின் மூலமாக அனைவரும் பயன்பெற முடியும் எனவும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.