தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்களின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று முதல் ஜனவரி முதல் வார இறுதிக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் நாடு மோசமாகப் பாதிக்கப்படும் என தெரிவித்து வெளிப்படையாக தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆர்வம் காட்டியுள்ள அதேவேளை தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்வதை காணக்கூடியதாக இருப்பதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.