மட்டக்களப்பிற்கு போதைப் பொருள்கள் வருகையைத் தடுப்பது மாவட்ட நிருவாகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாபியா வலைப்பின்னலாக உள்ளது என மட்டக்களப்பு மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
பெண் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரையறைகளை உருவாக்குதல் எனும் ஆய்வின் கொள்கைச் சுருக்க வெளியீட்டு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
“ஒட்டு மொத்த சமூகத்திற்கே கேடு உண்டாக்கும் போதைப் பொருள் பாவனை, பெண்களை பாலியல் இலஞ்சத்திற்கு ஆளாக்குவது என்பவை வெறுமனே பெண்களுக்கான பிரச்சினைகளாக மட்டும் நோக்கக் கூடாது.இதற்கு அனைவரும் இணைந்து சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
மாவட்ட நிருவாகம் போதைப் பொருள் ஒழிப்பிற்காக விளம்பரம் இல்லாமல் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.இதில் ஒட்டு மொத்த சமூகங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.
போதைப் பொருள் ஊடுருவும் மார்க்கம், அதனைத் தடுத்து நிறுத்துவது நிருவாகத்திலுள்ள எங்களது கைகளுக்கு எட்டாத ஒரு மாபியாவாகவே கருத வேண்டியுள்ளது” என்றார்.