நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கான கொவிட் தனிமைப்படுத்தலுக்கு செல்வதற்கான அதன் தேவை எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் முடிவடையும் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனா தனது பூஜ்ஜிய- கொவிட் கொள்கையை கைவிட்டதால், நீக்கப்படும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளில் இந்த நடவடிக்கை சமீபத்தியது.
கொவிட் தொடர்பான நோய்த்தொற்றுகளில் சீனா தொற்றுப் பரவலைக் காண்கிறது மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாங்கள் சமாளிக்க போராடுவதாகக் கூறியுள்ளனர். கொவிட் புள்ளிவிபரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
மாற்றங்கள் குறித்த தனது முதல் கருத்துக்களில், ஜனாதிபதி ஸி ஜின்பிங், உயிர்களைக் காப்பாற்ற சாத்தியமானதை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மார்ச் 2020ஆம் ஆண்டு முதல், சீனாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாய மையப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், நேரத்தின் நீளம் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது, முதலில் மூன்று வாரங்களில் இருந்து தற்போது வெறும் ஐந்து நாட்களாகும்.
புதிய விதிகளின் கீழ், கொவிட் ஒரு வகுப்பு ஏ தொற்று நோயிலிருந்து பி வகுப்புக்கு தரமிறக்கப்படும், அதாவது தனிமைப்படுத்தல் இனி அமுல்படுத்தப்படாது.