லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது. தி லெஜண்ட் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் திகதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தி லெஜண்ட் இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லெஜண்ட் சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜெண்ட் விரைவில் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தி லெஜண்ட் படத்தின் ஓடிடி வெளியீடாக இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

















