இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 21 ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர்.
12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததுடன் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.