சிவில் சமூக குழுக்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்த சில தரப்பினர் தற்போது நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அந்த முயற்சிகளை தோற்கடிக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார்.
தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை தேர்தலை நடத்துவது தேவையற்றது என தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் கூறினார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதிகளை இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.