நாட்டில் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின் டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.