சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஆனால் சீன வெளியுறவு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 ஆயிரத்து 259 பேர் கொரோனாவினால் நான்காவது அலையினால் உயிரிழந்துள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், தினசரி ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.