இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 112 ஓட்டங்களையும், சுப்மன் கில் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 02 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 1 விக்கெட்டையும், கசுன் ராஜித ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக தசுன் சானக்க 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணியின், ஹார்டிக் பாண்டியா, உம்ரான் மாலிக், சஹால் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.



















