இலங்கையின் வனப் பரப்பு 16% குறைந்துள்ளதாக வெளியாகிய செய்திகளை வனப் பாதுகாப்புத் தலைவர் மறுத்துள்ளார்.
வன வரைபடங்களை வனப் பாதுகாப்புத்துறை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.