இலங்கையும் இந்தியாவும் நிலம் மற்றும் கடல் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள தெற்காசிய அண்டை நாடுகளாக உள்ளதோடு 2,500 ஆண்டுகள் வரலாற்று முக்கியமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் சுதந்திரமடைந்து 75ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இருதரப்பு உறவுகள் பல்வேறு வழிகளிலும் மேலும் பிணைக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று பதிவாகும்.
குறிப்பாக, இருநாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளதோடு இது பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு அதிக உத்வேகத்தை வழங்கியுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி போன்ற சர்வதேச தளங்களில் இரு நாடுகளினதும் கூட்டு பங்கேற்பு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே இருநாடுகளுக்கும் காணப்படும் இணைப்புகள் இருநாடுகளுக்கும் இடையிலான பிரதேசங்களை சேவைகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட வணிக ரீதியான ஆழமான ஒத்துழைப்பிற்கு இடமளிக்கிறது.
இத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான புதிய இணைப்பு மூலோபாயத்தின் மூலம் பயன்படுத்தப்படாத திறன்களைப் பயன்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியான உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் மூலம் விரைவாக ஒத்துழைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், தெற்காசியாவில் பிராந்திய இணைப்புக்கான இந்தியாவின் முயற்சியில் அதன் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் கீழ் பரஸ்பர உறவுகள் மேம்பட்டு வருவதோடு உலகளாவிய வல்லரசுகளின் கவனமும் பிராந்தியத்தினை நோக்கி குவிந்துள்ளது.
இதேநேரம், கொரோனா தாக்கத்தின் பின்னரான நிலைமையில் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மறுவடிவத்தைப் பெற்றுள்ளதோடு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் மீண்டும் மதிப்புமிக்கதாகவும் மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.
இதேநேரம், இந்தியா 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்துள்ளது.
1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு, உலகின் இரண்டாவது பெரிய சந்தை மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.87 டிரில்லியனையும் கடந்த நிலை ஆகிய முதலீட்டிற்கான போதுமான வாய்ப்புகளை வழங்குகிறது.
இவ்வாறான நிலையில் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்புக்கான கணிசமான ஆற்றலைக் கொண்ட இந்தியாவை நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சிறந்த வர்த்தக பங்காளியாக காணப்படுகின்றது.
இலங்கையில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் இதர சுய முயற்சிகளுக்கு இந்தியா பரந்த அளவிலான முக்கிய சந்தையாக அமைவதுடன், இலங்கையின் தேயிலை, கோப்பி, ஆடைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.
அதுமட்டுமன்றி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரையில நான்கு பில்லியன் டொலர்கள் வரையிலான உதவிகளை உடனடியாக இந்தியா வழங்கி தோள்கொடுத்திருக்கின்றது.
உலகில் எந்தவொரு நாடும் தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவிகளை அளிப்பதற்கு முன்வராத நிலையில் இந்தியா தனது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக இந்தியா, சர்வதேசத்தினை நாடியுள்ள இலங்கைக்கு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று உத்தரவாதங்களை வழங்குவதற்கும் செயற்பட்டுவருகின்றது.
குறிப்பாக, இலங்கையின் வெளிவவிகார துறையினர் சர்தேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களின் ஈடுபட்டுபோது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக பங்கேற்றிருந்தமை இந்தியாவின் அதீதமான கரிசனையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
அதுமட்டுமன்றி, இலங்கையில் வடக்கு,கிழக்க, மலையகத்தில் பொதுமக்களின் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை வலுப்படுத்தவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பினைச் செய்துவருகின்றது. இச்செயற்பாடு பல மட்டங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
இருப்பினும், தற்போது வரையில், இந்தியாவுடன், இலங்கை மேற்கொண்டுள்ள இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தாமை இருநாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரும் கரிசனைகளை ஏற்படுத்தும் விடயமாக இருக்கின்றது.
ஆகவே வரலாற்று உறவுகள் மற்றும் 75ஆண்டகளான சுதந்திரந்திரத்தின் பின்னரான பிணைப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்த்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்வரவேண்டியது அவசியமாகின்றது.