வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மல்லாவி நகர்ப் பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தி ஆர்பாட்டக்காரர்கள் போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.